உங்களுக்குப் பிடித்தவர்களை வசியம் செய்ய வேண்டுமா? அப்ப இத செய்யுங்க..! – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இந்த சகுனங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்…இது உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணி…!
இந்தியா பல கலாச்சாரங்களும்,மொழிகளும் நிறைந்த நாடாகும். இங்கு ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் என தனிப்பட்ட நம்பிக்கைகளும், பழக்கவழக்கங்களும் உள்ளது. இந்தியா பல விதத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும் மூடநம்பிக்கைகள் என்பது இன்றும் இந்தியா முழுவதும் இருக்கிறது. ஆனால் இவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அவற்றிற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கும்.
சகுனம் பார்ப்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பழக்கமாகும். குறிப்பாக முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போதும், சுபகாரியங்களுக்கு செல்லும்போதும் சகுனம் பார்க்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. நல்ல சகுனங்கள் என்று சில இருக்கும்போது கெட்ட சகுனங்களும் இருக்கத்தான் செய்யும். இந்த அபசகுனங்கள் உங்களை நோக்கி வரும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணியாகும். இந்த பதிவில் உங்களுக்கு வரப்போகிற ஆபத்தை உணர்த்தும் அபசகுனங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
விளக்கு அணைவது
உங்கள் பூஜையறையில் பிரார்த்தனை செய்யும்போது எரிந்து கொண்டிருக்கும் விளக்கு திடீரென அணைவது முக்கியமான அபசகுனமாகும். உங்களுக்கு அருகாமையில் ஆபத்து காத்திருக்கிறது என்பதன் அறிகுறிதான் இது.
நாய் அழுவது
உங்கள் வீட்டிற்க்கு வெளியே இரவு நேரத்தில் நாய் அழும் சத்தத்தை கேட்டால் உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய ஆபத்து வரப்போகிறது என்று அர்த்தம். உடனடியாக அந்த நாயை அங்கிருந்து விரட்டி விடுங்கள்.
அழைப்பது
நீங்கள் ஏதாவது முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது எதிர்பாராத விதமாக யாராவது உங்களை திடீரென அழைப்பது அபசகுனங்களில் ஒன்றாகும். இது அந்த காரியத்தை தடைசெய்வதோடு உங்களின் முன்னேற்றத்தையும் தடுக்கும்.
மரணத்தின் அறிகுறி
உங்கள் வீட்டில் இருக்கும் கடவுளின் படங்களோ அல்லது சிலைகளோ திடீரென கீழே விழுவது மோசமான அபசகுனமாகும். இது உங்கள் குடும்பத்தில் ஒருவர் மரணிக்கப் போவதன் அறிகுறியாகும்.
கண்ணாடி உடைவது
உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்கள் திடீரென உடைவது அபசகுனங்களில் ஒன்றாகும். இது உங்கள் குடும்பத்தில் இருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் தொலையப்போவதற்கான அறிகுறியாகும்.
பெண்ணின் அழுகை
நீங்கள் வெளியே செல்லும்போது உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணின் அழுகையை கேட்க நேர்ந்தால் அது அபசகுனமாகும். இது உங்கள் வாழ்க்கையில் சோதனைக்காலம் வரப்போவதன் அறிகுறியாகும்.
காகம்
காகம் உங்கள் தலையில் எலும்பை போடுவது முக்கியமான அபசகுனமாகும். இது உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருங்கியவர்களுக்கோ மரணம் அருகிலிருப்பதை குறிக்கும்.
பூனையின் அழுகை
நீங்கள் அடிக்கடி பூனா அழுவதை கேட்க நேர்ந்தால் அது அபசகுனங்களில் ஒன்றாகும். இது உங்கள் வாழ்க்கையில் சோதனைகள் தொடர்ந்து வரப்போவதன் அறிகுறியாகும்.
பல்லி
நீங்கள் புதிய வீட்டிற்குள் செல்லும் போது அங்கே பல்லி ஒன்று இறந்து கிடந்தால் அது பெரிய அபசகுனமாகும். முறையான சடங்குகளும், பூஜைகளும் செய்த பின்னர் அந்த வீட்டுக்குள் மீண்டும் செல்லவும்.