இவ்வுலகில் யாருக்கு தான் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்காது. நிச்சயம் அனைவருக்குமே இருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு தான் பணத்தை வைத்திருந்தாலும், இன்னும் அதிகமாக சம்பாதிக்கவே விரும்புவர். கடின உழைப்பும், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதும் ஒருவரை சிறந்த வழியில் பணத்தை ஈட்டச் செய்யும். அதே சமயம் ஒருவரது ராசிக்கும், செல்வத்தை ஈட்டுவதற்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரியுமா?
ஆம், சிலர் கடுமையாக உழைக்கமாட்டார்கள். ஆனால் சிறிது முயற்சித்தாலே பணக்காரர் ஆகிவிடுவர். ஆனால் வேறு சில எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்நிலையை அடைய முடியாமல் இருப்பர். இவை அனைத்திற்கும் ஒருவரது ராசியும் ஓர் காரணம் என ஜோதிடம் கூறுகிறது.
உங்களுக்கு எந்த ராசிக்கார்களுக்கு பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட மக்கள் மற்றவர்களை விட மிகவும் விரைவில் பணத்தை சம்பாதிப்பார்கள். இங்கு அப்படி விரைவில் பணத்தை சம்பாதிக்கும் சில ராசிக்காரர்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்யார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் அந்த ராசிக்கார்களுள் ஒருவராக இருக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கார்கள் பிடிவாத தன்மைக் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் பொறுமைசாலி மற்றும் நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்கள் எதிலும் அதிக கவனத்தை செலுத்துவார்கள் மற்றும் மற்றவர்களால் முடியாத காரியத்தைக் கூட இவர்களால் முடிக்க முடியும். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் தங்களது உழைப்பால் தான் பணத்தை ஈட்ட விரும்புவார்கள். இவர்கள் தேவையில்லாத செலவுகளை செய்பவர்களாக இருப்பர். ஏனெனில் இவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவார்கள்.
மேலும் இவர்கள் இயற்கையாகவே தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு எப்போதும் ஸ்பெஷலான பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்துவார்கள். என்ன தான் தேவையில்லாத செலவுகளை செய்பவராக இருந்தாலும், இந்த ராசிக்காரர்களிடம் சேமிப்பு எப்போதுமே இருக்கும். இந்த ஒரு பழக்கமே இவர்களை செல்வந்தராக்குகிறது என்பதை மறக்காதீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் மீது மிகவும் அன்பானவர்கள் மற்றும் அக்கறை கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடிய அளவு தாராள மனப்பான்மை கொண்டவர்கள். குடும்பத்திற்கு அடுத்தப்படியாக இவர்களது முன்னுரிமை நிதி பாதுகாப்பு ஆகும். இவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதில் சிறந்தவர்கள்.
மேலும் இவர்கள் எப்போதும் தங்களது நிதி நிலைமை மற்றும் முடிவெடுக்கும் போது மற்றவர்களுடன் கலந்தாலோசிக்க மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது நிதி பாதுகாப்பிற்காக இளமையிலேயே சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் வீணாக எந்த ஒரு செலவையும் செய்யமாட்டார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே பணத்தை தாராளமாக செலவழிப்பார்கள்.
சிம்மம்
நிதி அம்சத்தைக் கொண்ட ராசிக்காரர்களுள் சிறப்பானவர்கள் தான் சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது நிதியுதவி முழுவதையும் நிர்வகிக்க ஒரு வினோதமான திறனைக் கொண்டுள்ளனர். இவர்கள் எப்போதும் சிறப்பான தீர்ப்பை வழங்குபவர்களாக இருப்பர் மற்றும் இவர்களது சேமிப்பு, செலவு மற்றும் பேரம் பேசுதல் போன்ற அனைத்துமே சிறப்பானதாக இருக்கும்.
மேலும் இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள் மற்றும் எதிலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தைரியமானவர்கள். எனவே இவர்கள் ரிஸ்க் எடுக்க எப்போதும் அஞ்சமாட்டார்கள். இவர்களது கற்பனைவளம் மற்றும் இலட்சிய இயல்பு, இவர்களை ஒரு நல்ல தலைவராக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சிறந்த மேலாளர்கள். இவர்கள் தங்களது நிதி நிலைமையை சிறப்பாக நிர்வகிப்பார்கள். இவர்களது அமைதியான குணத்தால், எந்த ஒரு சிக்கலான சூழ்நிலைகளிலும் நல்ல தீர்வைக் காண்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் கொடுக்கல்-வாங்கல்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதால், இவர்கள் மிகச்சிறந்த தீர்மானங்களை எடுப்பவர்களாக இருப்பர்.
மேலும் இவர்கள் மிகவும் சிக்கனக்காரர்கள். இதனால் இவர்கள் நிதியை சிறப்பாக சேமிப்பவர்களாக இருப்பர். ஆனால் இவர்களுக்கு உணவு என்றால் கொள்ளைப் பிரியம். எனவே இவர்கள் மற்றவர்களுக்கு விருந்து அளிக்க செலவு செய்ய யோசிக்கமாட்டார்கள். முக்கியமாக கன்னி ராசிக்காரர்களுக்கு ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பானதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பர். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் பணம் பணம் என்று இருப்பர். ஆனால் இவர்களிடம் சேமிப்பு என்பது இருக்காது. இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்கு போடும் திட்டங்களால், அதிகம் சம்பாதிக்க முடியும்.
மேலும் இவர்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் எடுக்கும் முடிவு எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களது பேரார்வம் மற்றும் போட்டியால் தான், இவர்கள் இருக்கும் துறைகளில் வெற்றியை எட்டுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மஞ்சள் நிற ஜஸ்பர் கல் சிறந்த அதிர்ஷ்டத்தை வழங்கும்.
MOST READ:
நாய் கடிச்சிடுச்சா?… உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க…
தொற்றுக்கள் எப்பொழுதுமே மிகவும் ஆபத்தானவை. வீட்டில் அழகான செல்லப் பிராணிக்ள வளர்ப்பது யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் குறிப்பாக நாய் வளர்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, வீட்டுக்கும் பாதுகாப்பு. அப்படி ஆசை ஆசையாக வளர்க்கும் நாயுடன் நாமும் வீட்டி்ல உள்ள குழந்தைகளும் விளையாடுவது வழக்கம் தான். அப்படி விளையாடுகிற பொழுது, நாயைத் தடவிக் கொடுப்பது, முடியைக் கோதிவிடுவது, வாலை பிடித்து இழுப்பது, மிதிப்பது போன்றவற்றைச் செய்வோம். அது உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் உங்கள் செல்லப் பிராணிக்கு?
அந்த சமயத்தில் நம்மை துன்புறுத்துகிறார்கள் என்று நினைத்து, தன்னுடைய கூர்மையான பற்களால் கீறவோ கடித்து விடவோ செய்யும். நம் வீட்டு நாய் மட்டுமல்ல, ரோட்டில் நாம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ரோட்டில் போகும் ஏதாவது ஒரு நாய் கடித்தோ, பற்களால் கீறவோ செய்துவிடும்.
நாய்க்கடி
அப்படி ஏதாவது நாய் கீறலோ அல்லது கடிக்கவோ செய்துவிட்டால், உடனே அதற்கு சரியான முதலுதவி செய்ய வேண்டும். அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடவோ, சாவகாசமாக மருத்துவமனைக்குச் செல்வதோ கூடாது. உடனடியாக சில விஷயங்களைச் செய்து முடிக்க வேண்டும். நாய் கடிக்கு உடனடியாக சில மருத்துவ சிகிச்சைகள் செய்வது மிக அவசியம்.
நாயினுடைய பற்கள் உங்களுடைய தோல் திசுக்களைக் கவ்வியிருக்கும். மிகச்சிறியதாக பல் பட்டிருந்தாலும் அது ஆபத்து தான். ஒருவேளை காயம் ஏதாவது உங்கள் கண்ணில் பட்டால், அந்த தொற்று பரவாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முதலில் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்லும் முன் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
மெதுவாக அழுத்துங்கள்
நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள். பாக்டீரியாக்கள் உள்ள ரத்தம் (விஷ ரத்தம்) உள்ளே சென்றாலும் அதை நீங்கள் அழுத்தும்போது வெளியே வந்து விடும். மேலும் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும்.
கழுவுங்கள்
நாய் கடித்த இடத்தை மென்மையான சோப்பும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டோ கழுவுங்கள்.
சுத்தமான துணி
நாய் கடித்த இடத்திலிருந்து கட்டாயம் ரத்தம் நிண நீருடன் சேர்ந்து வடியும். சுத்தமான துணியைக் கொண்டு வடியும் ரத்தத்தைத் துடைத்து எடுங்கள்.
ஆன்டி-பயாடிக் க்ரீம்
காயமுள்ள இடத்தை டெட்டால் கொண்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, அந்த இடத்தில் ஆன்டி- பயாடிக் க்ரீம் போட்டு விடுங்கள்.
கட்டு போடுங்கள்
ஆன்டி பயாடிக் க்ரீம் அப்ளை செய்தவுடன் அதன்மேல் சிறிது காட்டனை வைத்து, மேலே மெல்லியதாக ஒரு கட்டு போடுங்கள்.
திரும்ப திரும்ப மாற்றுங்கள்
குறைந்தது இரண்டு மணி நேரத்து ஒருமுறையாவது,அந்த கட்டை பிரித்து, மீண்டும் துடைத்துவிட்டு வேறு கட்டு போடுங்கள்.
தொற்றுகள்
நாய் கடித்த இடத்தில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடியுங்கள். கடித்த இடத்தில் வீக்கம், சிவந்து இருப்பது, வலி, அதனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.