கொஞ்சம் கால நிலை மாறினாலும் போதும், கணவனுடன் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு வரும் புது மனைவியை போல, இந்த சளியும், இருமலும் நம்முடன் ஒட்டிக் கொண்டு பாடாய்படுத்தும்.
சில நேரங்களில் உலகிலேயே கொடுமையான பாதிப்பு இந்த சளி, இருமல் தான் என்று தோணும். தும்மி, தும்மி, இருமி, இருமி மொத்த உடல் சக்தியும் கரைந்து போய்விடும்.
எப்படி இருந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தான் இதன் ஆயுள் என்றாலும், அவதிப்படுபவர்களுக்கு தானே தெரியும் அந்த ஏழு நாட்களின் வேதனை.
கால நிலை மாற்றம் காரணத்தால் நீங்களும் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டால், இதோ! இந்த 7 எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்…
எலுமிச்சை மற்றும் தேன்!
இருமல், சளி தொல்லை இருக்கும் போது உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் அத்தியாவசியம். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும்.
இஞ்சி மற்றும் தேன்!
சிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம். ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வேண்டும்.
உலர் திராட்சை!
ஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். இன்னிப்பு சுவை கொண்டிருப்பதால் கஷ்டம் இன்றி உட்கொள்ள முடியும்.
புதினா, மாதுளை!
புதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்தும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவில் வேண்டுமானலும் சேர்த்து உண்ணலாம்.
மாதுளை உதிர்த்து, அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
பால், மஞ்சள், மிளகு!
இது ஒரு கைக்கொடுக்கும் வைத்தியம். பாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.
சீரகம், பனங்கற்கண்டு!
பொடி செய்த பனங்கற்கண்டுடன் பத்து கிராம் பொடி செய்த சீரகம் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். இதை காலை, மாலை இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
தூதுவளை!
சளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ உணவு. தூதுவளை கொடியை காய வைத்து பொடியாக்கி கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் தூதுவளை பொடியையும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் தூதுவளை பொடி மற்றும் தேனுடன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்
MOST READ:
உங்கள் கால் விரல்கள் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி கூறும் ரகசியம் என்ன தெரியுமா?
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் நம்மைக் பற்றிய ரகசியங்களையும், நம் எதிர்காலத்தைப் பற்றிய குறிப்புகளையும் உள்ளடக்கியதுதான். கண்கள் நம்முடைய ஆன்மாவை வெளிப்படுத்தும் ஜன்னலாக இருக்கும், நமது கைரேகை என்பது நமது விதியை வெளிப்படுத்தும் ஜன்னலாக இருக்கிறது. ஆனால் நமது பாதத்தில் நாம் எப்பொழுதும் அக்கறை செலுத்துவதில்லை. அதுவும் நம் வாழ்க்கையில் முக்கியப்பங்கை வகிக்கிறது.
பண்டைய களங்களில் இருந்தே எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அதில் இருக்கும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்கும் மக்கள் கைரேகையை படிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். அப்படி கைரேகை மட்டுமின்றி உங்கள் பாதத்தின் வடிவமும் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி பலவற்றைக் கூறுகிறது. இந்த பதிவில் சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி உங்கள் பாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
சாமுத்ரிகா சாஸ்திரம்
கடவுளின் படைப்பையும் எதிர்காலத்தை கணிப்பதற்கான வழியையும் புரிந்து கொள்ள முனிவர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிட்டார்கள். அப்படி அவர்களின் ஞானத்தின் மூலம் உருவானதுதான் சாமுத்ரிகா சாஸ்திரம் ஆகும். வேத மரபின் ஒரு பகுதியான சமுத்திர சாஸ்திரம் என்பது மனித முகம், ஒளி மற்றும் முழு உடல் பகுப்பாய்வு பற்றிய ஆய்வு ஆகும். அடிப்படையில் சாமுத்ரிகா சாஸ்திரம் என்பது உடல் அம்சங்களைப் பற்றிய அறிவாகும்.
பாதங்கள் எதை வெளிப்படுத்துக்கிறது?
ஒரு நபரின் கால்கள் அவர்களின் விதி, ஆளுமை, கடந்த கால மற்றும் எதிர்காலம், இயல்பு ஆகியவற்றைப் பற்றி வெளிப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. உங்கள் பாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள முதலில் அதனை நன்கு சுத்தம் செய்து கழுவி ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும்.
கால் விரல்
காலின் தடிமனான சுட்டு விரல் அல்லது மெலிதான சுண்டு விரல் நீண்ட ஆயுள் மற்றும் செல்வத்தின் அடையாளமாகும். ஒருவருக்கு இந்த இரண்டுமே இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும், குறைவிலா செல்வத்தையும் கொண்டிருப்பார்கள் என்று சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது.
கால் விரல்களின் இடைவெளி
கட்டை விரல் மற்றும் சுட்டு விரலுக்கு இடையே உள்ள இடைவெளி மற்றதை விட சிறியதாக இருந்தால், அது போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை குறிக்கிறது. சுட்டு விரல் கட்டை விரலை விட பெரியதாக இருந்தால் அவர்கள் சீரற்ற, மூர்க்கத்தனமான காதல் வாழ்க்கையை கொண்டிருப்பார்கள். கட்டை விரலும், சுட்டு விரலும் ஒரே நீளத்தில் இருந்தால் அவர்கள் ஆரோக்கியமான காதல் வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
உள்ளங்கால் கோடு
பெருவிரலின் அடிப்பகுதியில் இருந்து வெளிவரும் மெல்லிய கோட்டின் இருப்பு மகத்தான செல்வத்தைக் குறிக்கிறது. இந்த வரியின் நீளம் நபரின் வாழ்க்கையில் செல்வம் எவ்வளவு அதிகமாகவும், எவ்வளவு காலமும் இருக்கும் என்பதை குறிக்கிறது. ஒருவரின் கால்களின் பின்புறத்தில் உள்ள கோடுகள் சிவப்பு நிறமாகவும், எந்த குறுக்கீடுகளும் இல்லாமல் நேர்த்தியாக காணப்பட்டால், அந்த நபர் அழகாக வளர்ந்து, அதிசய திறமைகளை உடையவராக இருப்பார் என்பதை இது குறிக்கிறது.
குதிகால்
குதிகால் வடிவம் ஒருவரின் வாழ்க்கையின் பயணத்தைப் பற்றி கணிக்கிறது. இது வட்ட வடிவமாகவும், மென்மையாகவும் அழகாகவும் இருந்தால், கவர்ச்சியான வாழ்க்கையை நடத்த எதிர்பார்க்கலாம். அதேசமயம் கடினமான குதிகாலை கொண்டவர்கள் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ நேரிடும்.
பாதம்
சில நபரின் கால் வித்தியாசமானதாக இருக்கும். அவர்களின் கால்களும், விரல்களும் வித்தியாசமானதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரே இடத்தில் எப்பொழுதும் குடியேற மாட்டார்கள், அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
கால் நகம்
உங்கள் இயற்கையான கால் நிறம் கூட நீங்கள் எப்படி ஒரு வாழ்க்கையை நடத்துவீர்கள் என்று சொல்ல முடியும். உங்களின் கால்நகம் இயற்கையாவே சற்றே பழுப்பேறிய நிறத்துடன் காணப்பட்டால் அவர்கள் வாழ்க்கையில் நேர்மையும் அதேசமயம் மிகஉயர்ந்த இடத்திலும் இருப்பார்கள். அதேபோல சிறிது நீலநிற நகங்களை கொண்டவர்கள் இறுதிவரை தொழிலாராகத்தான் இருப்பார்கள். மஞ்சள் நிற நகங்களை கொண்டவர்கள் கணக்கு தொடர்பான துறையில் உயர்ந்த பொறுப்பில் இருப்பார்கள்.